வியக்க வைக்கும் இயற்கை

வியக்க வைக்ககும் இயற்கை அதை

வியந்து வியந்து பார்க்கிறேன்.

விடியற்காலை பொழுது வந்தா

சுட்டு எரிக்கும் சூரியனோ சுற்றி சுற்றி திரியுது.

வேரூன்றி தாவரங்கள் தானாக முளைக்குது

பூ பூக்கும் பூவெல்லாம் வாசமாக பூக்குது.

வண்டு ஒன்று வந்து தேன் குடித்து ரீங்காரம் பாடுது

வண்ண வண்ண பறவை

எல்லாம் வானத்திலே பறக்குது.

இரவு வந்தா  வானத்திலே விண்மீன்கள் மிளிருது

வட்ட நிலா வானத்திலே  உலா வந்து போகுது

வியக்க வைக்ககும் இயற்கை

அதை வியந்து வியந்து பார்க்கிறேன்

கரு மேகமது சேரயிலே

வண்ண மயில்  தோகை விரித்து ஆடுது

வானத்திலே பொழிகின்ற மழைத் துளியும்

ஒன்று கூடி அருவியாக கொட்டுது

பூமியிலேச் சாரல் ஒன்று தூவையிலே புள்ளி வைத்து,

புள்ளி வைத்து புது கோலம் ஒன்று போடுது

தென்றலதை வறவேற்க தென்னை மரம் ஆடுது

Share :

Tag :
Comments :