முதல் உதவி

முதல் உதவி செய்து விடு முடிகின்ற போதாவது உன் வாழ்க்கை,

அணைகின்ற போது அடுத்த திரியை எரிய வைக்கும் மெழுகுவர்த்தி ஆகிவிடு.

தானம் என்றாலே ,தலை கவிழ்ந்து கொள்கிறதா:கண்களும்,கைகளும் ஒழிந்து கொள்கிறதா:,

பல யுகங்களாய் பழகப்பட்ட மனித மனம் அதுதான். மாற்றி,புதிய தீபம் ஏற்றி வை.

உனக்கு தெரியாது; உன்னால் இந்த உலகில் யார் வாழவில்லை; இறக்கும் போதாவது ரசிக்கவை;

கண்ணில்லாதவனை வானவில்லை குருடன் இடறி விழுந்தால்

குழி தோண்டியவன் மீது ,பழி போட முடியாது, நீ 

விழிதனை தராத போது!! வழி தவறி போவது, விழி அற்றவர் மட்டும் தானா!.

பார்வை அற்றவர்களை ,பார்த்துக் கொண்டே போகிறார்கள்.

பார்வை அற்றவர்கள் யார்?.

முப்பதொரு நிமிடங்கள் முழித்திருக்கும் விழிகளை,

விழிப்புணர்வுடன் விடை கொடுங்கள் .

பக்கத்து வீட்டுக்கு பருப்பு, மிளகாய் கொடுப்பது தானமல்ல.

வக்கத்து நிற்பவர்க்கு,உறுப்பு தானம் அளிப்பது தான்; தானமடா.

தடவி, தடவி பொருட்களை தரம் அறிவதும்.

தட்டி, தட்டி தடியால், வழி நடப்பதும்.

அந்த நொடி,

உன் இதயத்தை இடி தாக்குவதில்லையா.?

நான்கு வருடங்களுக்கு வருமா! நீ கொடுக்கும் நன்கொடை.

நாற்பது வருடங்களுக்கு, இன்னும் வாழ விரும்புகிறாயா– செய் ! கண் கொடை.

Share :

Comments :