நட்பு • Oct 15, 2020
அன்பின் வழித்தடங்கள்
அன்பின் வழித்தடத்தில் வேரூன்றிய மரமாய்
நட்பு நிழல் தந்து காத்திருக்கிறது. மழையை சந்தித்த
மகிழ்ச்சியால் மலர்களாய் பூத்திருக்கிறது. தன் கிளைகளை காக்க,
பலத்த காற்று வீசினாலும் நிலையாக நிற்கிறது.
தன்னை வெட்டி சாய்த்தாலும் ஆணிவேராய் துணையாக நிற்கிறது.
அதன் வழியிலே நட்புகள் மீண்டும் தோன்றி வளர்கிறது