இன்பம் • Oct 15, 2020
தமிழ் தாய் வாழ்த்து
உணவு ருசியென்றால், உமிழ் நீர் சுரக்கும்,
உணர்வு மொழியென்றால், அது தமிழாகத்தான் இருக்கும்.
தமிழ் எழுத்துக்களை செதுக்கினேன் வார்த்தை பிறந்தது
நல்ல வார்த்தைகளை செதுக்கினேன் உள்ளத்தில்
கவிதை பிறந்தது,
எண்ணத்தில் தெள்ளத் தெளிவு தெரிந்தது.
நீ என்னுள் வந்துவிட்டாய் என்ற உணர்வு புரிந்தது.
தமிழ்தாயே நீ வாழ்க !
தமிழ் அன்னையே உன்னை என்றும்
மறவாத நிலை வேண்டும் !
தமிழ் மண்ணைத் தவிர வேறெங்கும்
பிறவாத நிலை வேண்டும் !