வாலி கவிதாஞ்சலி

வணக்கம் சொல்லியே ஆரம்பிக்கிறேன் வாலி

வளர்ந்தவன் நான் வாலிபனாய்உன் வாலிப கவிதைகளை கேட்டு மட்டுமே ;

நீங்கள் எழுதிய பாடல்கள் எல்லாம்இளமையாக இருந்ததால், உங்களை போலவே; வாழ்க்கையில் ஒரு முறை கூடஉங்களை சந்திக்காமல் விட்டுவிட்டேன்

தமிழ் காற்று வீசும் இடம் எல்லாம்உங்கள் பாட்டுக்கள் இருப்பதால் உங்களை பார்க்காமலே இருந்துவிட்டேன்

சுவாசித்து கொண்டே இருப்பதுநின்று விடும் என்று எனக்கு தோன்றவில்லைஇன்றோடு அது நின்று விட போவதும் இல்லைவார்த்தைகளில் இன்னும்வடிவமாய் வாழ்ந்து கொண்டு இருப்பவர் நீங்கள்

ஸ்ரீரங்கத்தில் இருந்துசிங்கம் ஒன்று சங்க தமிழுக்கு பங்கம் வராமல்இது வரை பார்த்து கொண்டதால்என்னவோ,உங்களை பார்க்காமலே இருந்துவிட்டேன்

வான் அழிந்து போவதில்லைஉன் வார்த்தைகளை போல; வான் ஒலி வடிவம் மாறினாலும்,வாலி உன் வார்த்தைகளுக்குவழி விட்டது வான் ஒலி தான்

வானில் ஒளிரும் நக்ஷத்திரமாக தான்இருக்க போகிறாய் என்பதால் என்னவோ! உங்களை பார்க்காமலே இருந்துவிட்டேன்

நீங்கள் மட்டும் பேனா எடுத்தால்

வரிசையாக அமர்ந்து விடுமோ! வரிகள்தறி நெய்வது போல் வரி நெய்தவர் நீங்கள்

வரி எய்த்தவர் வரிசையில் விலகிவரி மேய்த்தவர் நீங்கள்நீங்கள் மேய்த்தது; செம்மறி அல்ல செம்மொழி;

உங்கள் வார்த்தை விளையாட்டுக்கு,தலை ஆட்டதவரே இல்லை; தமிழ் நாட்டில்வார்த்தை ஜாலங்களில் காலங்களை மறக்காதவரே இல்லை

வாலி உன் வரிகளில் மூழ்காதவரே இல்லைவள்ளுவனின் மூன்றாம் பால் போல;

லிரிக்ஸ் நீங்கள் எழுதிதான் T.S.Rலீடர் ஆக கிடைத்தார் M.G.R

ஐயப்படுவதற்கு இல்லை;ஐந்து விரல்கள் பேனா பிடித்துஐந்து தலை முறைக்கு கனா கொடுத்தது என்றால்,

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையேஉன் பாடல் போல்வாலி உன் பாடல்கள் நீடுழி வாழி என்று வாழ்த்தாத உயிர் இல்லையே

Share :

Comments :