வாலி கவிதாஞ்சலி

வாலி கவிதாஞ்சலி
வணக்கம் சொல்லியே ஆரம்பிக்கிறேன் வாலி

வளர்ந்தவன் நான் வாலிபனாய்
உன் வாலிப கவிதைகளை கேட்டு மட்டுமே ;

நீங்கள் எழுதிய பாடல்கள் எல்லாம்
இளமையாக இருந்ததால், உங்களை போலவே; வாழ்க்கையில் ஒரு முறை கூட
உங்களை சந்திக்காமல் விட்டுவிட்டேன்

தமிழ் காற்று வீசும் இடம் எல்லாம்
உங்கள் பாட்டுக்கள் இருப்பதால் உங்களை பார்க்காமலே இருந்துவிட்டேன்

சுவாசித்து கொண்டே இருப்பது
நின்று விடும் என்று எனக்கு தோன்றவில்லை
இன்றோடு அது நின்று விட போவதும் இல்லை
வார்த்தைகளில் இன்னும்
வடிவமாய் வாழ்ந்து கொண்டு இருப்பவர் நீங்கள்

ஸ்ரீரங்கத்தில் இருந்து
சிங்கம் ஒன்று சங்க தமிழுக்கு பங்கம் வராமல்
இது வரை பார்த்து கொண்டதால்
என்னவோ,உங்களை பார்க்காமலே இருந்துவிட்டேன்

வான் அழிந்து போவதில்லை
உன் வார்த்தைகளை போல; வான் ஒலி வடிவம் மாறினாலும்,
வாலி உன் வார்த்தைகளுக்கு
வழி விட்டது வான் ஒலி தான்

வானில் ஒளிரும் நக்ஷத்திரமாக தான்
இருக்க போகிறாய் என்பதால் 
என்னவோ! உங்களை பார்க்காமலே இருந்துவிட்டேன்

நீங்கள் மட்டும் பேனா எடுத்தால்

வரிசையாக அமர்ந்து விடுமோ! வரிகள்
தறி நெய்வது போல் வரி நெய்தவர் நீங்கள்

வரி எய்த்தவர் வரிசையில் விலகி
வரி மேய்த்தவர் நீங்கள்
நீங்கள் மேய்த்தது; செம்மறி அல்ல செம்மொழி;

உங்கள் வார்த்தை விளையாட்டுக்கு,
தலை ஆட்டதவரே இல்லை; தமிழ் நாட்டில்
வார்த்தை ஜாலங்களில் காலங்களை மறக்காதவரே இல்லை

வாலி உன் வரிகளில் மூழ்காதவரே இல்லை
வள்ளுவனின் மூன்றாம் பால் போல;

லிரிக்ஸ் நீங்கள் எழுதிதான் T.S.R
லீடர் ஆக கிடைத்தார் M.G.R

ஐயப்படுவதற்கு இல்லை;
ஐந்து விரல்கள் பேனா பிடித்து
ஐந்து தலை முறைக்கு கனா கொடுத்தது என்றால்,

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே
உன் பாடல் போல்
வாலி உன் பாடல்கள் நீடுழி வாழி என்று வாழ்த்தாத உயிர் இல்லையே

Share :

Comments :