சற்று முன்பு வரை எனக்கு
கற்று கொடுத்தது , எல்லாம் நீ
அவளை கண்ட நாள் முதல்,
கண்ணாடி பார்க்க கற்று கொடுத்தாய் காதலே !
அவளின் கடைவிழி பார்வைக்காக, கால் கடுக்க நிற்க, கற்று கொடுத்தாய் காதலே !
அவள் பேசிய வார்த்தைகளால்,வாசனை பொருட்கள் வாங்க,கற்று கொடுத்தாய் காதலே !
அவள் மனம் விட்டு பேசும் போது , மலர்கள் ரசிக்க கற்று கொடுத்தாய் காதலே !
அவளின் காதலை சொன்னவுடன்,கடிதம் எழுத: இல்லை :கவிதை எழுத கற்று கொடுத்தாய் காதலே !
எல்லாவற்றையும் எனக்கே, முதலில் கற்று கொடுத்த நீ , ஏன் ?
என் காதலிக்கு மட்டும் ஏமாற்ற கற்று கொடுத்தாய்
காதலே இது நியாயமா ?
Comments