இந்தியா இதுவரை சந்தித்திடாத சமுகாய சீரழிவு இது
எந்த கவியும் , எதிர் பார்த்திடாமல் ,எழுத நேர்ந்திடாமல் எழுந்த பிரச்சனை இது
தெருவெங்கும் இருக்கும் தேனீர் கடையை விட
பெருகிப்போன திருமண தரகர்களின்(மேற்றிமோனியல் வெப்சைட் நோக்கம் தான் என்ன ?லாபம்
“திருமண தகுதி சம்பளம்தான் என்பது சமூக சாபம்”
திருமணம் மருவி திரு “பணம்” என்பதே ;நிருபணம் ஆகிவிட்டது.
வெறும் உத்தியோகம் மட்டுமே புருஷ லக்ஷணம் மாறி,
வருமானம் மாதம் பல லட்சம் மட்டுமே புருஷ லக்ஷணம் ஆகிவிட்டது.
வெள்ளை பணத்தை வைத்தே கள்ள சந்தையில் ,
பெண் பிள்ளையை விற்கும் பெற்றோர்கள் பெருகிவிட்டனர்.
வணிகமயமான வாழ்வில்,புனிதமாய் இருந்த திருமண உறவையும்,
தணிக்கை கணிதமாய் தரம் தாழ்த்தியதில், பெண் வீட்டாருக்கு பெருமகிழ்ச்சி.
வாசனை பொருட்களில் ஆரம்பித்த வெளி நாட்டு ஆசை,துளி கூட மிச்சம் வைக்காமல்
துளிர்த்து விட்டது உங்கள் மனதில்; மளிகை பொருட்களில் பரவிய
அயல் நாடு மோகம் மாப்பிள்ளை பார்ப்பதிலும் முதலிடம் வகிக்கிறது;
இந்திய பெண்ணுக்கு,இந்தியன் என்றாலே, இந்தியாவில் இருந்தாலே கசக்கிறது;
மேலை நாட்டிலேயே வாழ்பவனுக்கு,
சேலை கட்டும் பெண்களின் சேர்க்கை எதற்கு?
இருமனம் நேசிப்பதுஅல்லவா;திருமணம் தன் தேசத்தையே நேசிக்காதவனா;
உன் பெண்ணை நேசித்து விட போகிறான்?
என யோசிக்காத பெற்றோர்களே;மோசம் போகின்றனர்
எந்த வரலாற்றில் இப்படி எழுதப்பட்டுள்ளது ,
இந்திய திருமண சட்டத்தில் இதுவா திருத்தப்பட்டுள்ளது ,
கணினியை தவிர, மற்ற பணியெல்லாம் மட்டமானவை என்று *
செல்வந்தனுக்கே கல்யாணம் மற்றவர்கள்
எல்லோரும் கல் ஆனோம். வறுமையை ஒழிக்குமே தவிர பணத்திற்கு
வாழ்வை செழிப்பாக்கும் செயல் திறன் தெரியாது.
நிலைத்திடாத பணத்தையே
மணமகனின் அம்சமாய் நினைத்திடும்
உங்கள் வம்சம் எப்படி தழைத்திடும்; நிதியே நிம்மதியெனும்
உங்கள் கனவுகள் ஒரு நாள் கலைந்திடும்;
பணத்தின் பழமொழி மறந்ததா’
பணம் இன்று போகும் உன் பெண்ணோடு
நாளை திரும்பி வரும் பெண்ணோடு, வட்டியுடன் அல்ல ; வருத்தத்துடன் ;
நிதி நிறைந்தவனையே,பதி ஆக்கிகொள்ளும்
அதிகார பெண்களின் ,சதிகார செயலினை யார் எடுத்து சொல்வது ?
மனசு நிறைந்த வாழ்வை விட,
சொகுசு நிறைந்த இடமே சொர்க்கம் என,
சொல்லி தரும் சொந்தகரர்களுக்கு யார் எடுத்து சொல்வது ?
அவா வரத்து அதிகமான பெற்றோர்களால்
விவாகரத்து அதிகமானதை யார் எடுத்து சொல்வது ?
நகரும் நகர வாகனங்களில் மட்டுமே
நன்றாக எழுதப்பட்டுள்ளன;நடைப்பெறாத வாசகம் ஆண்,பெண் திருமண வயது இதுவென்று!
மணமகன் மந்தைகள் கூடும்,
விவாக சுயம்வர (வியாபார) சந்தையில்,
விலை போகாத, எல்லா ஆண்களும் செல்லாக்காசுதான்.
Comments